வாணியம்பாடியில் ஆட்டோ ஓட்டுநரின் மனைவிக்கு ரூபாய் 1 கோடி 63 லட்சம் வரி பாக்கி கட்ட நோட்டீஸ் தொடரும் ஜி.எஸ்.டி வரி மோசடி !
வாணியம்பாடி, டிச.17-
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் முஹம்மத் பாஷா. இவரது மனைவி ஷாஹிதா இவர் தமிழக அரசு வழங்கும் மகளிர் உரிமை தொகை வந்துள்ளதா என வங்கி கணக்கில் பார்க்கச் சென்ற போது மகளிர் உரிமைத் தொகை வரவில்லை எனவும் அப்போது வங்கி ஊழியர் ஒருவர் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தெரிவித்த தன் பேரில் ஆதார் எண்ணை இணைத்த போது வங்கி மேலாளர் ஷாஹிதாவை அழைத்து உங்கள் பெயரில் சென்னை பெரிமேடு பகுதியில் இயங்கி வரும் நிறுவனத்தின் பெயரில் ரூபாய் 1 கோடி 63 லட்சம் வரி பாக்கி உள்ளதாகவும் அதனை செலுத்தும் படி நோட்டீஸ் வந்துள்ளது என்று கூறியுள்ளார்.தகவல் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஷாஹிதா இது குறித்து அவரது கணவர் முஹம்மத் பாஷாவிடம் தெரிவித்த நிலையில் தாங்கள் ஏமாற்றபட்டதை உணர்ந்து ஜி.எஸ்.டி மோசடி குறித்து வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்க சென்ற போது அங்கே காவல் துறையினர் சம்மந்தப்பட்ட குற்றம் மீதான நடவடிக்கைக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தி அனுப்பிவைத்தனர்
ஆட்டோ ஓட்டுநரின் மனைவிக்கு ரூபாய் 1 கோடி 63 லட்சம் வரி பாக்கி நோட்டீஸ் அனுப்ப பட்ட விவகாரம் ஏழை எளியகூவி தொழிலாளர் களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக