வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகள் அவதி! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 28 டிசம்பர், 2025

வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகள் அவதி!

வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் வாகன ஓட்டிகள் அவதி!
வாணியம்பாடி, டிச 28 - 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் எல்.ஐ.சி அலுவலகம், அரசு மருத்துவமனை,, பஜார், நியூடவுன் ஆகிய முக்கிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய சர்க்கிளில் வார விடுமுறை என்பதால் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரண மாக வாகன ஓட்டிகள் கடும் அவதிக் குள்ளாகினர். மேலும்போக்குவரத்திணை சீர் செய்ய காவல்துறையினர் யாரும் இல்லாததால் சுமார் ஒரு மணி நேரத்து க்கு மேலாக போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் கூட அவசர சிகிச்சைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரை ந்து சென்ற வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட தலைவர் கே.பி.எஸ்.மாதேஸ் வரன் மற்றும் பொதுமக்கள் சிலர் இணைந்து போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

செய்தியாளர். மோ.அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad