தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது - இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 20 டிசம்பர், 2025

தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது - இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.

தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது - இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவட்டார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பைக் திருட்டு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தது . இப்புகார்கள் சம்பந்தமாக உடனடியாக குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்கள்.
உத்தரவின் படி தக்கலை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர். பார்த்திபன் அவர்களின் மேற்பார்வையில் , ஆய்வாளர்.மதன் ராம்குமார் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது
இந்த விசாரணையில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டது கேரள மாநிலம் வள்ளக்கடவு பகுதியை சேர்ந்த சஃபரூல்லா என்பவரின் மகன் சஜித் கான்(25) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவனிடமிருந்து இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் குற்றவாளியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.


தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad