வேங்கியாம்பாளையம் அருள்மிகு மகா மாரியம்மன் திருவிழா நிகழ்ச்சி 13.01.2026 மார்கழி 29 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 25 ஜனவரி, 2026

வேங்கியாம்பாளையம் அருள்மிகு மகா மாரியம்மன் திருவிழா நிகழ்ச்சி 13.01.2026 மார்கழி 29 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது.



 ஈரோடு மாவட்டம், கொடுமுடி ஒன்றியம், பாசூர் கிராமம், வேங்கியாம்பாளையம் அருள்மிகு மகா மாரியம்மன் திருவிழா நிகழ்ச்சி 13.01.2026 மார்கழி 29 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. 

அதனை தொடர்ந்து 15.01.2026 தை மாதம் 1 ஆம் நாள் வியாழக்கிழமை கம்பம் நடுதல் நிகழ்ச்சியும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றது, 20.01.2.26 தை 6 ஆம் நாள் செவ்வாய்கிழமை இரவு அம்மன் திருவீதி உலா நடைபெற்றது, 21.01.2026 தை 7 ஆம் நாள் புதன் அதிகாலை முப்பாட்டு மாவிளக்கு பூஜை நடைபெற்றது, 22.01.2026 தை 8 ஆம் நாள் வியாழன் மதியம் காவேரி ஆற்றிற்கு சென்று தீர்த்தம், பால்குடம், காவடி மற்றும் அக்கினி கும்பம் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெறும் அன்று இரவு பொங்கல் பூஜை கம்பம் விடுதல் நிகழ்ச்சியும்,

23.1.26 தை 9 ஆம் நாள் வெள்ளி மாலை மஞ்சள் நீராடுதல் திருவீதி உலா, அம்பாள் ஊஞ்சல் ஆடுதல் நிகழ்ச்சி மற்றும் மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது...



தமிழக குரல் செய்தியாளர் புன்னகை தூரன் இரா.சங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad