திருப்பூரை தலைமை இடமாக கொண்டு செயல்படும் அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தில் இந்திய திருநாட்டின் 77 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது சங்கத்தின் நிறுவன தலைவர் ஜி.கே. விவசாய மணி (எ) ஜி. சுப்பிரமணியம் அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார் முன்னதாக மாநில சங்க பேச்சாளர் சந்திரசேகரன் அவர்கள் குடியரசு தின சிறப்புஉரையில்
பல மாகாணங்களாக பிரிந்து இருக்கும் தேசம் ஒன்றுகூடிய மகத்தான நாள் ஒற்றுமையை உணர்த்தும் இந்த திருநாளில் தேசத்தை காத்த அனைத்து
தியாகிகளையும் போற்றுவோமாக என குறிப்பிட்டார் தொடர்ந்து பேசிய மாநில ஊடகப்பிரிவு செயலாளர் குருநாதன் தனது உரையில் வேற்றுமையில் ஒற்றுமைதான் நமது பலம் ஒன்றுபட்ட பயனுள்ள வாழ்க்கையை இந்த மண்ணிற்கும் மக்களுக்காகவும் வாழ்ந்து வரலாற்றில் நாமும் தடம் பதிப்போமாக என குறிப்பிட்டார் இந்த நிகழ்ச்சியில் தலைமை சங்க நிர்வாகிகளும் உறுப்பினர்களும் மற்றும் மகளிர் அணி குழந்தைகளும் தேசிய கொடிக்கு மரியாதை செய்தனர் மேலும் அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி. கே.விவசாய மணி (எ) ஜி.சுப்பிரமணியம் அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் கிளைகளில் மிக சிறப்பாக குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது
மாவட்ட செய்தியாளர் அ .காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக