ரெட்கிராஸ் வேலூர் மாவட்ட துணைத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் அவர்களுடன் காட்பாடி ரெட்கிராஸ் நிர்வாகிகள் சந்திப்பு !
காட்பாடி , ஜன7 -
வேலூர் மாவட்டம் காட்பாடி இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் காட்பாடி துணைக்கிளையின் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமையில் துணைத்தலைவர் ஆர்.விஜயகுமாரி பொருளாளர் வி.பழனி, மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஆர்.சீனிவாசன் ஆகி யோர் இன்று ரெட்கிராஸ் வேலூர் மாவட்ட துணைத்தலைவர் மற்றும் வேலூர் பாராளு மன்ற உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த அவர்களை நேரில் சந்தித்து பேசினர் காட்பாடி துணை கிளையின் 2026ஆம் ஆண்டிற் கான மாதாந்திர நாட்காட்டியினை வழங்கினர்.
மேலும் ஜனவரி மாத இறுதியில் நடை பெறும் ஆண்டு விழா மலர் வெளியிட்டு சிறப்பிக் கவும் தேர்தல் மற்றும் பொதுக் குழு கூட்டத்தில் பங்கேற்று சிறப்பிக்கவும் வருகை தருமாறு அழைப்பு விடுத்தனர். மேலும் காட்பாடி ரெட்கிராஸ் செயல்பாடு கள் குறித்து விளக்கி பேசினர் அப்போது கூறிய அவர்கள் ஆண்டு மலர்வெளியீட்டு விழாவில் பங்கேற்பதாகவும் ரெட்கிராஸ் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாகவும் பாராட்டினார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக