கன்னியாகுமரி மாவட்டம் மாதவரம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (31) என்பவர், மகாதானபுரத்தில் 'சனேட் மேன் பவர் கன்சல்டன்சி' என்ற பெயரில் நிறுவனம் நடத்தி, துபாயில் உள்ள தனது நிறுவனங்கள் மூலம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 130-க்கும் மேற்பட்ட நபர்களிடம் சுமார் ஒரு கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் வரை மோசடி செய்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
ஸ்டாலின் உத்தரவின்படி செயல்பட்ட மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார், வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த சந்தோஷை மதுரையில் வைத்து 24 மணி நேரத்திற்குள் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுபோன்று வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடிகளில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என எச்சரித்துள்ள எஸ்.பி., பாதிக்கப்பட்டவர்கள் 9498196976 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக