சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 19 பிப்ரவரி, 2026

சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம்.

சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் 

பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரி அரங்கில் கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவ,மாணவியர் மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கான சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பி.பி. முருகன், காவல் ஆய்வாளர் அனிதா, காவல் உதவி ஆய்வாளர் முத்துக்குமார், காவல் உதவி ஆய்வாளர் சுவாதிகா கலந்து கொண்டு நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள் சைபர் குற்றங்களிலிருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து அதிகாரிகள் விரிவான விளக்கங்களை அளித்தனர். 

மேலும், பல்வேறு இணையவழி குற்றங்கள் தொடர்பான ஆவணச் சான்றுகளையும் அவர்கள் சமர்ப்பித்தனர்.இவ்விழாவில்    
கல்லூரி முதல்வர் பர்னபாஸ்,பஜாஜ் ஃபைனான்ஸ் மண்டல மேலாளர் முனியசாமி மற்றும் மேலாளர் டேவிட் லிவிங்ஸ்டன் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

கலந்துரையாடல் நிகழ்வின் போது, மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விளக்கமளித்தார்.
 
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஓய்வுபெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேஷியஸ் நன்றியுரையுடனும் நிகழ்ச்சி நிறைவுற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad