குடியாத்தத்தில் அஇஅதிமு கழகம் சார்பாக பேரறிஞர் அண்ணா அவர்களின் 57 வது நினைவு நாள் அனுசரிப்பு !
குடியாத்தம் ,பிப் 3 -
வேலூர் புறநகர் மாவட்டம் குடியாத்தம் நகர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணி அளவில் பேரறிஞர் பெருந்தகை அண் ணா அவர்களின் 57 ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி காமராஜர் பாலம் அருகில் உள்ள பேரறிஞர் அண்ணா புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் திருவுருவ சிலைக்கு நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கஸ்பா ஆர் மூர்த்தி எஸ் அமுதா சிவப் பிரகாசம் ஏ ரவிச்சந்திரன் எம் பாஸ்கர் எம் பூங்கொடி மூர்த்தி அமுதா கருணா எஸ் என் சுந்தரேசன் எஸ் ஐ அன்வர் பாஷா எம் கே சலீம் ஆர் அட்சயா வினோத்குமார் ஜி தேவராஜ் ஆர் கே மகாலிங்கம் எஸ் டி மோகன்ராஜ் எல் எ அன்பழகன் நகர மன்ற உறுப்பினர்கள் லாவண்யா குமரன் ரேவதி மோகன் மற்றும் மாவட்ட நகர ஒன்றிய வார்டு கழக நிர்வாகிகள் சார்பணி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக