பேரறிஞர் அண்ணா 57-வது நினைவு நாள் – தாராபுரத்தில் நினைவேந்தல் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 3 பிப்ரவரி, 2026

பேரறிஞர் அண்ணா 57-வது நினைவு நாள் – தாராபுரத்தில் நினைவேந்தல்


திராவிட இயக்கத்தின் பேரறிஞரும், முன்னாள் முதல்வருமான பேரறிஞர் அண்ணா அவர்களின் 57-வது நினைவு நாள் இன்று (03.02.2026) அனுசரிக்கப்பட்டது.

இதனை ஒட்டி திருப்பூர் கிழக்கு மாவட்டம், தாராபுரம் நகர கழகம் சார்பில், வடதாரை காமராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


தொடர்ந்து, தாராபுரம் நகரில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்நிகழ்ச்சி தாராபுரம் நகர கழக செயலாளர் திரு.முருகானந்தம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஜீவா துரைசாமி அவர்கள், தாராபுரம் நகர மன்ற தலைவர் பாப்புகண்ணன் அவர்கள், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ் அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட மற்றும் நகர கழக நிர்வாகிகள், இந்நாள் மற்றும் முன்னாள் உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மகளிரணி, இளைஞரணி, மாணவரணி, தொண்டரணி, தகவல் தொழில்நுட்ப அணி உள்ளிட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், நகரமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், இந்நாள் மற்றும் முன்னாள் நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் திரளாக கலந்து கொண்டு, சமூகநீதி, பகுத்தறிவு, தமிழின முன்னேற்றத்திற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவினை போற்றி வணங்கினர். 


திருப்பூர் மாவட்ட செய்தியாளர் S.ஜாபர்சாதிக்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad