60 அடி தேர் சாய்ந்து விபத்து! மயன கொள்ளை திருவிழாவில் அரசு விதி முறையை பின்பற்றாத திருவிழா குழு நிர்வாகம் !
வேலூர் மாவட்டம் காட்பாடியில் 60 அடி தேர் சாய்ந்து விபத்து மயன கொள்ளை திருவிழாவில் அரசு விதி முறையை பின்பற்றாத திருவிழா குழு நிர்வாகம் வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, மின்சாரத்துறை, போக்குவரத்து துறை, இந்து சமய அறநிலைத்துறை மாநகரா ட்சி நிர்வாகத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் காவல்துறை மாவட்ட எஸ்.பி, மாவட்ட ஆட்சியர் அரசின் விதிமுறைப்படி பின்பற்ற பரிந்துரை செய்ய உத்தரவிட வேண்டி சமூக ஆர்வலர்கள் வேண்டு கோள்.வேலூர் மாவட்டம், அருகே விருதம் பட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயான கொள்ளை திருவிழா நேற்று (பிப்.16) இரவு நடைபெற்றது. இதில் 60 அடி உயரம் உள்ள தேரில் அம்மன் சிலை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அப்போது தீடீரென பாலாற் றின் கரையில் தேர் கவிழ்ந்து விபத்து குள்ளானது. தேர் விழுந்ததில் 10க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி மாவட்ட காவல் கண்காணிப் பாளர் சிவராமன் விசாரணை நடத்தி வருகிறார். மயான கொள்ளை திருவிழா என்பது கோலாகலமாக நடக்கின்ற ஒரு மாபெரும் திருவிழா இந்த திருவிழாவில் மிகப்பெரிய தேர் அமைப்பதும்அடித்தளம் அதற்கு உண்டான அகலத்தையோ அல்லது உண்டான பளுவில் தாங்கக் கூடிய நிலையில் அமைக்காத காரணத் தால் வருடா வருடம் சாய்ந்து வருகிறது. இதுகுறித்து அலட்சியமாக எடுத்துக் கொண்டதால்தான் தொடர்ச்சியாக சாய்ந்து வருகிறது இதில் உயிர் சேதம் ஏற்பட்டிருந்தால் அதை நம்மால் திரும்ப அந்த உயிரை பெற முடியுமா இதனை சம்பந்தப்பட்ட துறை நிர்வாகங்கள் அரசு விதிமுறையை பின்பற்றாத திருவிழா குழு நிர்வாகம் வருவாய்த்துறை, தீய ணைப்புத்துறை, இந்து சமய அறநிலைத் துறை மாநகராட்சி நிர்வாகத்துறை, பொதுப்பணித்துறை மின்சாரத்துறை போக்குவரத்து துறை மற்றும் காவல் துறை மாவட்ட எஸ்.பி, மாவட்ட ஆட்சியர் அரசின் விதிமுறைப்படி பின்பற்ற பரிந்துரை செய்ய உத்தரவிட வேண்டி சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இதுகுறித்து தொடர்கதையாக வருடா வருடம் சாய்ந்து வருவதாகவும் பலருக்கு காயம் ஏற்படு கிறது நூலிழையில் உயிர்தப்பி காயம் ஏற்படுகிறது. தவிர்க்க முடியாத ஏதேனும் அசம்பாவிதம் உயிர் சேதம் ஏற்பட்டால் பேரிழப்பு அந்த குடும்பங்களின் நிலை கேள்விக்குறி..? பொதுநலன் கருதி உயிரின் மீது சிறிதளவு அக்கறை வைத்து இந்த அரசு செயல்பட வேண்டி யும் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக