ஸ்ரீவைகுண்டம் பிப்ரவரி 16. தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நவதிருப்பதிகளில் இரண்டாம் திவ்ய தேசமான நத்தம் விஜயாசன பெருமாள் கோவிலில் இன்று கருடசேவை நடந்தது. கடந்த பிப்ரவரி 12 ந்தேதி மாசித் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
காலை 7 மணிக்கு விஸ்வரூபம். 8 மணிக்கு நித்தியல். 9.10 மணிக்கு தோளுக்கினியானில் வீதி புறப்பாடு. 10.30 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம். 11.30 மணிக்கு தீபாரானை பின்னர் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் சீனிவாசன். ஸ்ரீவேங்டகிருஷ்ணன். திருவேங்கடத்தான். வீரராகவன். பெரிய திருவடி. சே கிரி. மதுரகவி . கருடப்பன். கண்ணன். ஆகியோர் சேவித்தனர். தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
மாலை 5 மணிக்கு சாயரட்சை. 5.45 மணிக்கு உற்சவர் எம்இடரகடிவான் வாகன மண்டபத்திற்கு எழுந்தருளினார். பின்னர் கருடவாகனத்தில் அலங்கரிக்கப்பட்டது. 8.00 மணிக்கு கருட வாகனத்தில் காட்சி தந்தார். வீதி உலா நடந்தது.
இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் கண்ணன். ராஜகோபாலன். ஸ்தலத்தார்கள் ராஜப்பா வெங்கடாச்சாரி. சீனிவாசன். தேவராஜன். கண்ணன். நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன் ஆய்வாளர் நிஷாந்தினி அறங்காவலர் குழுத் தலைவர் அருணா தேவி கொம்பையா உறுப்பினர்கள் மாரியம்மாள் சண்முகசுந்தரம். பேக்கிரி முருகன். முத்துகிருஷ்ணன். பாலகிருஷ்ணன். உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக