தாராபுரம் கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்பு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 17 பிப்ரவரி, 2026

தாராபுரம் கிணற்றில் விழுந்த புள்ளிமான் மீட்பு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் இன்று கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் ஒன்றை வனத்துறை மற்றும் காவல்துறை இணைந்து மீட்டனர்.

தாராபுரம் சோளக்கடை வீதியைச் சேர்ந்த யுவராஜ் (51) மார்க்கண்டன் என்பவரின் மகன் இன்று காலை தனது தோட்டத்திற்கு மாடுபிடிக்கச் சென்றபோது, ஈஸ்வரன் கோவில் அருகே ஒரு புள்ளிமான் தடுமாறி கிணற்றில் விழுந்திருப்பதை கவனித்தார்.

இதையடுத்து அவர் உடனடியாக தாராபுரம் காவல் நிலையம் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை காவலர் குணசேகரன் மற்றும் காவல்துறையினர் இணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad