இன்று (17-02-2026) கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வட்டம் களந்தை பகுதியில்....
உழைப்போர் உயர்ந்திட....
வேண்டிய வரம் தரும்...
1008 திருவிளக்கு பூஜை விழா நடைபெற்றது.
பெரிய களந்தை கிராமம் மயில்சாமி கவுண்டர் திருமண மண்டபத்தில் பொள்ளாச்சி மக்கள் நல சங்கம் நடத்திய உழைப்போர் உயர்ந்திட வேண்டிய வரம் தரும் 1008 திருவிளக்கு பூஜை ஆனது மிக விமர்சனமாக காலை 10 மணிக்கு துவங்கப்பட்டது.
பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் வசிக்கின்ற பல கிராம மக்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். முதல் நிகழ்வாக பெரிய களந்தை அருள்மிகு ஆதி ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் ஆயிரம் மகளிர் ஒன்று கூடி பூஜை குண்டான வழிமுறைகள் விதிமுறைகள் பற்றி கலந்தாய்வு மற்றும் ஒத்திகை பார்க்கப்பட்டது.
அதன் பின்னர் பொள்ளாச்சி மக்கள் நல சங்கத்தின் தலைவர் ஆட்டுக்கிடா மில் K. நித்தியானந்தன் அவர்கள் தலைமையில் 1008 பெண்கள் கோவிலில் இருந்து மண்டபத்திற்கு சிறப்பு தாளங்களுடன் சீர்வரிசியுடன் முறைப்படி அழைத்துச் செல்லப்பட்டனர்.
மண்டபத்தில் அனைத்து மகளிரும் அமர்ந்து தியானம் செய்யும் வகையில் இடம் ஒதுக்கப்பட்டு பூஜை குண்டான பொருள்களான தட்டு, விபூதி ,குங்குமம் ,மாட விளக்கு போன்ற பொருள்கள் தனித்தனியாக தரப்பட்டு முறையாக அமர வைக்கப்பட்டு, அவர்களுக்கு கடவுள் வழிபாடு ,ஆன்மீகம் ,நன்றி உணர்வு ,கருணை, ஈதல் போன்ற நற்குணங்கள் கற்பிக்கப்பட்டு கூட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
பயனாளிகளுக்கு மாட விளக்கு, உண்டியல் மற்றும் மதிய உணவு முறையாக வழங்கப்பட்டு அவர் அவர் ஊருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
குடும்ப அமைதி, குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய விழிப்புணர்வு, பொருளாதாரம் முன்னேற்றம் மற்றும்உடல் நலம் பற்றி பொள்ளாச்சி மக்கள் நல சங்கத்தின் தலைவர். ஆட்டுக்கிடா மில் K. நித்தியானந்தன் அவர்கள் மிக சிறப்பாக எடுத்துரைத்தது அனைவரின் மனதை வெகுவாக ஈர்த்தது .பல கிராம மக்கள் இந்த திருவிளக்கு பூஜையில்கலந்து கொண்டு இதனால் பயனடைந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் M. பரமசிவம்





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக