கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அடுத்த பெரும் செல்வவிளை பகுதியில் உடைந்து சிதலமடைந்து ஆபத்தான முறையில் நிற்கும் உயர் மின்னழுத்த மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பம் அமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை.
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளத்திலிருந்து பெரும் செல்வவிளை செல்லும் பிரதான சாலையில் வேம்பனூர் குளம் அருகே சாலை ஓரமாக அமைந்துள்ள உயர் மின்னழுத்த மின் கம்பம் ஒன்று மிக மோசமான மற்றும் ஆபத்தான நிலையில் சாய்ந்து நிற்கிறது.
அந்த மின் கம்பத்தின் மேல் பகுதியில் உள்ள கான்கிரீட் முழுவதுமாக பெயர்ந்து கம்பிகள் சிதலமடைந்த நிலையில் உள்ளது. எந்நேரமும் கீழே விழும் அபாயத்தில் அந்த மின் கம்பம் நிற்பதால் அந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள் கடும் அச்சத்தில் பயணம் செய்து வருகின்றனர்.
இந்த சாலை வழியாக பள்ளி, கல்லூரி வாகனங்கள், பொதுமக்கள், இருசக்கர மற்றும் கனரக வாகனங்கள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதுபோன்ற பரபரப்பான பகுதியில் இந்த மின் கம்பம் விழுந்தால் பெரும் உயிர் சேதமும் அசம்பாவிதமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது என அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பலமுறை மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும், மனு அளிக்கப்பட்டும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
உயிருக்கு ஆபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுத்து ஆபத்தான மின் கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக