குடியாத்தம் அடுத்த வளத்தூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் அரசின் பள்ளி மாணவர்களுக்கான இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி !
குடியாத்தம் ,பிப்10 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த வளத்தூர். அரசு மேல்நிலைப் பள்ளியில் விலை இல்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது நிகழ்ச்சிக்கு பள்ளியை தலைமை ஆசிரியர் வெங்கட் ரமணா தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சேகரன் எஸ் எம் தலைவர் கனிமொழி பஞ்சாயத்து தலைவர் நிர்மலா சேட்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர் உதவி தலைமை ஆசிரியர் பாலசந்தர் வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக
குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப் பினர் அமுலு விஜியன் ஒன்றிய குழு உறுப்பினர் . சத்தியானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு .மாணவர்களுக்கு இலவச சைக்கிளை வாங்கினார்கள்.
இதில் அரசு மருத்துவமனை ஆலோச னைக் குழு உறுப்பினர் ரவி . கீழ் பட்டி உஷாராணி தமிழரசன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பா முன் னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலை வர் ராமகிருஷ்ணன் முன்னாள் ஆசிரியர் காந்தி முன்னாள் கூட்டுறவு சங்க தலை வர் சந்திரன் முன்னால் இயக்குனர் கோபி ஊராட்சி மன்ற தலைவர்கள் பாபு ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொண் டனர். இந்நிகழ்ச்சியில் 51 மாணவ -மாண வியர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட்டது.
விழாவின் முடிவில் பட்டதாரி ஆசிரியர் விஸ்வநாதன் நன்றி தெரிவித்தார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக