குமரி:நாகர்கோயில் ஆசாரிபள்ளம் மருத்துவமனை முன்பு சென்டர்மீடியனில் கார் மோதி விபத்து. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 16 பிப்ரவரி, 2026

குமரி:நாகர்கோயில் ஆசாரிபள்ளம் மருத்துவமனை முன்பு சென்டர்மீடியனில் கார் மோதி விபத்து.

குமரி:நாகர்கோயில் ஆசாரிபள்ளம் மருத்துவமனை முன்பு சென்டர்மீடியனில் கார் மோதி விபத்து 

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு உள்ள சாலையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற சொகுசு கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அச்சாலையில் உள்ள சென்டர்மீடியனில் மோதி விபத்து.

இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொருங்கி பலத்த சேதம். இது சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.

அதிஷ்டவசமாக ஓட்டுநர் உயிர் தப்பினார். ஓட்டுநர் காரை அங்கு போட்டு விட்டு ஓட்டம். போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை, மேலும் அச்சாலையில் தொடர்ந்து சென்டர் மீடியனில் கார்கள் மோதி விபத்து ஏற்படுத்துகிறது.

குறுகிய சாலை என்பதால் விபத்து ஏற்பட்டதாக தெரிய வருகிறது, எனவே உடனடியாக பேராபத்து நடக்கும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad