கணியூர் காவல் துறையினர் பொதுமக்களுக்கு விபத்து மற்றும் குற்றம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 16 பிப்ரவரி, 2026

கணியூர் காவல் துறையினர் பொதுமக்களுக்கு விபத்து மற்றும் குற்றம் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்


திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் உடுமலைப்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளர் அவர்களின் மேற்பார்வையில் கணியூர் காவல் ஆய்வாளர் திருமதி பஞ்சு லட்சுமி அவர்கள் தலைமையில் கணியூர் காவல் உதவி ஆய்வாளர் கார்த்திக் குமார் மற்றும் காவலர்கள் இணைந்து கணியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கணியூர் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வேன் ஓட்டுநர்கள், கார் ஓட்டுநர்கள், மற்றும் பொது மக்களுக்கு விபத்து மற்றும் குற்றம் சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது இந்த விழிப்புணர்வில் பொதுமக்கள் வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் அணிவது,சீட் பெல்ட் அணிவது, மொபைல் போன் பயன்படுத்துவது தவிர்ப்பது, குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டுவது தொடர்பாகவும் குற்றம் தொடர்பாக பொதுமக்கள் வீட்டை பூட்டி சென்றால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிப்பதும், வீட்டில் உள்ள முக்கியமான பொருட்கள் பாதுகாப்பாக வைப்பதும், பெண்கள் கழுத்தில் நகையை அணிந்து கொண்டு தனியாக செல்லும் போது பாதுகாப்பாக செல்வதும் இன்னும் பிற அறிவுரைகளும் விழிப்புணர்வும் கணியூர் உதவி ஆய்வாளர் கார்த்திக் குமார் அவர்களால் வழங்கப்பட்டது பொதுமக்கள் காவலர்களின் செயலை பாராட்டு வருகிறார்கள். கணியூர் காவல் எல்லையில் இது போன்ற அதிகமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதை பொதுமக்கள்  திருப்பூர் மாவட்ட காவல்துறையினருக்கு நன்றிகளை தெரிவித்து கொண்டனர் 

மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad