அவிநாசிபாளையத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தலைவா் ஈசன் முருகசாமிக்கு சமூக ஆர்வலர்கள் நேரில் வாழ்த்து - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 16 பிப்ரவரி, 2026

அவிநாசிபாளையத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தலைவா் ஈசன் முருகசாமிக்கு சமூக ஆர்வலர்கள் நேரில் வாழ்த்து


கறிக்கோழி வளா்ப்புக்கான கூலி விவகாரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராடியது, தூண்டி விடுதல், பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியது என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவா் ஈசன் முருகசாமி மீது ஐந்து காவல் நிலையங்களில் பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, திருப்பூரில் கடந்த மாதம் 12-ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்டு வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். அவரை நீதிமன்றம் பிணையில் விடுவித்த நிலையில் வேலூா் மத்திய சிறையில் இருந்து ஈசன் முருகசாமி வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

சிறையிலிருந்து வெளியே வந்த  தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவா் ஈசன் முருகசாமியை  அவிநாசி பாளையம் பகுதியிலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் மாலை அணிவித்து வரவேற்றனா்.  

அப்போது திருப்பூர் விவசாயிகள் நல முன்னேற்ற சங்க தலைவர் சமூக ஆர்வலர் ஈ.பி.அ.சரவணன், நஞ்சராயன் குளம் பாதுகாப்பு சங்க தலைவர் கேஏகே . கிருஷ்ணசாமி, ஆண்டிபாளையம் ரவி உள்ளிட்டவர்கள் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவா் ஈசன் முருகசாமியை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

விவசாயிகள் போராட கூடாது, பொதுமக்கள் போராட கூடாது என்பதுதான் தற்போதைய நிலையில் பொய் வழக்கு போட்டு சிறையில் அடைப்பதால் விவசாயிகளை ஒருபோதும் அடக்க முடியாது என்று அவர்கள் கூறினர்

 மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad