வேலூர் மாவட்டம் குடியாத்தம் கைத்தறி பூங்காவுக்கு சுற்றுசுவர் கட்டப்படுமா சமூக விரோதிகளால் போதை ஆசாமி களால் அட்டகாசம் !
குடியாத்தம் , பிப் 13 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பிச்சனூர். பகுதியில் உள்ள சிங்கார வேலர் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தி ற்கு சொந்தமான 9 ஆயிரம் சதுர அடியில். கட்டிடம் தேர்வு செய்யப்பட்டு சிறிய கைத்தறி பூங்கா அமைப்பதற்கான கட்டடம்.புரைமைக்கும். பணிக்கு ரூபாய் 28.31 லட்சத்திற்கு தறிகள் மற்றும் உபகரணங்களை கொள்முதல் நிறுவ சுமார் 30.14 லட்சம் உள் கட்டமைப்பு பணிகளுக்கு 9.20 லட்சம் வரை என மொத்தம் 68 லட்சம் மதிப்பீட்டில் சிறிய அளவிலான கைத்தறி பூங்கா ஏற்படுத்தப் பட்டது கடந்த ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதி அமைச்சர்கள் துரைமுருகன் காந்தி ஆகியோர் கைத்தறி பூங்காவை திறந்து வைத்தனர் இங்கு. 50 தறிகள் நிறுவப் பட்டு நெசவாளர்கள் பணிகளை மேற் கொண்டு வருகின்றனர். இங்கு பட்டு லுங்கி காட்டன் சேலைகள் நெய்யப்பட்டு வருகிறது இந்நிலையில் கைத்தறி பூங்காம் அமைந்துள்ள இடத்தில் முன் பக்கம் காலியாக உள்ளதால் விடுமுறை மற்றும் இரவு நேரங்களில் சுற்றுப்புறப் பகுதிகளை சேர்ந்த மது பிரியர்கள் அங்கே வந்து அமர்ந்து கொண்டு குடித்துவிட்டு செல்கின்றனர் போதை தலைக்கேறியதும் பாட்டில்களை அங்கே வீசி உடைத்து விட்டு செல்கின்றனர் இதனால் காலையில் கைத்தறி . பூங்காவுக்கு நெசவுப் பணிகளை மேற்கொள்ள வரும் தொழிலாளர்கள் கால்களில் பாட்டில் சீசாக்கள் பாட்டில்கள் பதம் பார்த்து வருகின்றனர் இதனால் நெசவுத்தொழில் மேற்கொள்ள வரும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் எனவே கைத்தறி பூங்காவை சுற்றிலும் சுற்றுசுவர் அமைத்து பாதுகாக்க வேண்டும் என கைத்தறி நெசவாளர்கள் மற்றும் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக