சிவாலய ஓட்டம்: குமரியில் டாரஸ் லாறிகள் நுழைய தடை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 13 பிப்ரவரி, 2026

சிவாலய ஓட்டம்: குமரியில் டாரஸ் லாறிகள் நுழைய தடை.

சிவாலய ஓட்டம்: குமரியில் டாரஸ் லாறிகள் நுழைய தடை

கன்னியாகுமரி மாவட்டம், முன்சிறை,  சிவாலய ஓட்டம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு பக்தர்களின் பாதுகாப்பிற்காக கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் சுமார் 1000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

பக்தர்கள் சாலையில் பாதுகாப்பாக செல்லும் வகையில் 14 மற்றும் 15 தேதிகளில் கனிமவள டாரஸ் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மாவட்டத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறும் வாகனங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad