மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் பொது தேர்தல் 2026 பணியின் பறக்கும் படை கண்காணிப்பு குழுக்களுக்கான பயிற்சி வகுப்பு !
வேலூர் , மார்ச் 5 -
வேலூர் மாவட்டம தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 ல் தேர்தல் பணி யில் ஈடுபடவுள்ள பறக்கும் படை குழு மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித் தலைவர் வே. இரா. சுப்புலெட்சுமி இ.ஆ. ப. அவர்கள் தலைமையில் இன்று (05.03.2026) ஆட்சியர் அலுவலக கூட்டரங் கில் நடைபெற்றது. இப்பயிற்சி வகுப்பில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட வருவாய் அலுவலர் மா.சிவசுப்பி ரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) (பொ) பொ.குண சேகரன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வேலூர் சட்டமன்ற தொகுதி வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார். குடியாத்தம் சட்டமன்ற தொகுதி/ குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி. காட்பாடி சட்டமன்ற தொகுதி தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திருமாறன். கீ.வகுப்பம் சட்டமன்ற தொகுதி மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி/ உதவி ஆணையர் (கலால்) பிரகாஷ், தேர்தல் வட்டாட்சியர் சத்தியமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக