திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் ஏபிஜே அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில் ஆதரவற்றவர்களுக்கு மனிதநேய சேவையாக இறுதி சடங்குகள் செய்து வரப்படுகிறது.
இந்த நிலையில், தாராபுரம் பைவ் கார்னர் பகுதியில் ஆதரவற்ற நிலையில் ராஜேந்திரன் என்பவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததையடுத்து அறக்கட்டளை நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு உரிய மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்தனர்.
இதன் மூலம் அறக்கட்டளை சார்பில் நல்லடக்கம் செய்யப்பட்ட 240வது ஆதரவற்ற உடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் அறக்கட்டளை தலைவர் அபுத்தாகீர், செயலாளர் சண்முகம், சமூக ஆர்வலர் ஜாபர் சாதிக், அழகர்,திருமாரகு, மற்றும் பத்திரிகையாளர் நூர் முகமது,அக்கீம், உள்ளிட்டோர் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.
ஆதரவற்றவர்களுக்கும் மரியாதையுடன் இறுதி சடங்கு செய்ய வேண்டும் என்ற மனிதநேய நோக்கில் இந்த சேவையை தொடர்ந்து செய்து வருவதாக அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக