நாராணபுரம் அருகே உள்ள கோவிந்தாபுரம் செங்காட்டுத் தோட்டத்தைச் சேர்ந்தவர் கோவித்தசாமி (வயது 65). இவரது மனைவி பாலாமணி (56), கடந்த மாதம் 17 ஆம் தேதி இரவு இவர்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்பொது வீட்டுக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள் 4 பேர் இந்த தம்பதியை தாக்கிவிட்டு பாலாமணி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலி, ஒரு பவுன் கம்மல் மற்றும் பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்தை பறித்துச் சென்றனர். இது குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் பல்லடம் பகுதியில் அவர்கள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று அவர்களை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். இதில் அவர்கள் உடுமலையை அடுத்த கொழுமம் பகுதியைச் சேர்ந்த சிவா(22), 17 வயது சிறுவன், திருப்பூர் மண் ணரையைச் சேர்த்த ஸ்ரீகாந்த்(21), திருப்பூர் மங்கலம் ரோட்டைச் சேர்ந்த சண்முகம் (24) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்கள் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக