வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.2.5 கோடி மோசடி செய்த வாலிபர் பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 3 மார்ச், 2026

வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.2.5 கோடி மோசடி செய்த வாலிபர் பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார்



அங்கன்வாடி பணியாளர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணி வாங்கித் தருவதாக கூறி 27 வயது வாலிபர் ஒருவர், அப்பகுதியிளரிடம் பணம் பெற்றதாகவும், ஆனால் அவர்களுக்கு உரிய வேலை வாங்கித்தரவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தாராபுரம் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் அந்த பரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் பலரிடம், ரூ.2.5கோடி வரை மோசடி செய்தது தெரியவந்தது. மேலும் அரசின் போலி முத்திரை, அச்சிடப்பட்ட பணி ஆணை சான்றிதழ்கள், அடையாள அட்டைகள் உள்ளீட்டவற்றை வழங்கியதும் தெரியவந்தது. இந்த நிலையில், அந்த வாலிபர் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு படிப்படியாக பணத்தை திருப்பி தருவதாக ஒப்புக்கொண்டார். மேலும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அந்த வாலிபரின் வீட்டுக்கு சென்று சத்தம் போட்டதாக போலீசில் அவர் புகார் அளித்தார், அதன் பேரில் தாராபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad