திருச்செந்தூரில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆவணி மற்றும் மாசிப் பெருந்திருவிழா மிகவும் பிரசித்திப் பெற்றது. இவ்வாண்டு மாசித் திருவிழா கடந்த பிப். 21ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சிகளான கடந்த 27ம்தேதி சிகப்பு சாத்தி, 28ம்தேதி காலை வெள்ளைச் சாத்தி பகலில் பச்சை சாத்தி கடைசல் சப்பரத்திலும் எழுந்தருளி வீதியுலா நடந்தது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது.இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.
காலை 7 மணிக்கு பிள்ளையார் தேர் நிலையிலிருந்து புறப்பட்டது. தொடர்ந்து காலை 7.45 மணிக்கு சுவாமி குமரவிடங்கப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் பெரிய தேரில் எழுந்தருளி நான்கு ரதவீதிகள் வழியாக வலம் வந்து நிலைக்கு வந்தது.
அதன்பின் தெய்வானை அம்மன் தேரில் எழுந்தருளி வீதி உலா வந்து நிலைக்கு வந்தது.
விழாவில் முதன்மை மாவட்ட நீதிபதி வசந்தி, மாவட்ட நீதிபதி வஷிக்குமார், திருச்செந்தூர் சார்பு நீதிபதி தினேஷ்குமார், குற்றவியல் நீதித்துறை நடுவர் சிதம்பரம், முன்னாள் தக்கார் கண்ணன் ஆதித்தன், நகராட்சி தலைவர் சிவஆனந்தி, துணைத் தலைவர் செங்குழி ரமேஷ், அதிமுக ஜெ.பேரவை மாவட்ட இணைச் செயலாளர் பழக்கடை திருப்பதி உள்பட பலஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு பணிகளில் திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கனகராஜன், மதுரைவீரன் உள்ளிட்ட 650க்கும் மேற்பட்ட போலீசாரும், ஊர் காவல்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக