தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே தேரிக்குடியிருப்பில் பிரசித்தி பெற்ற கற்குவேல் அய்யனார் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கள்ளர் வெட்டு விழா பிரசித்தி பெற்றது.
இவை தவிர விசேஷ நாட்கள் மற்றும் பௌர்ணமி தினத்தன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. மாசி மாத பௌர்ணமியையொட்டி திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு யாகசாலை பூஜை நடந்தது.
தொடர்ந்து மாலை 6 மணிக்கு திருவாசகம் வாசிக்கப்பட்டது. 6.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, 7 மணிக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை தூத்துக்குடி மண்டல இணை ஆணையர் அன்புமணி வழி காட்டுதலின்படி கோயில் செயல் அலுவலர் காந்திமதி மற்றும் அறநிலையத் துறையினர், பணியாளர்கள் செய்திருந்தனர்.
இதனிடையே சந்திர கிரகணகத்தையொட்டி செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது. மறுநாள் புதன்கிழமை காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு பரிகார பூஜைகளுக்கு பின் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக