குடியாத்தம் அருகே எஸ்சி எஸ்டி வழக்கு கொடுத்ததில் முன்விராத காரணமாக கூலி தொழிலாளி அடித்துக் கொலை !
குடியாத்தம் ,மார்ச் 9 -
வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், வளத்தூர் உள்வட்டம், கருணீகசமுத்திரம் கிராமத்தில் வசித்து வரும் செல்வம் த/பெ தாமோதரன் ( வயது -55 இருளர் இணைத்தை சேர்ந்தவர் ) என்பவர்விக்ரம் கார்டன் அருகே மது அருந்தி கொண்டி ருந்த போது மேற்கண்ட பகுதியில் வசித்து வரும் ரோஷன் பாபு த/பெ முனிரத்தினம்(சுமார் 40 வயது- கம்மவார்) என்பவர் நேற்று (08.03.2021) இரவு 8 மணி யளவில் செல்வம் என்பவரை முன்வி ரோதம் காரணமாக அடித்து கொலை செய்யப்பட்டதாக கிராம விசாரணையில் தெரியவருகிறது.இது குறித்து மேல்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரி வித்ததன் பேரில் சுமார் 50 காவலர்கள் விரைந்து வந்து ரோஷன் பாபுவை கைது செய்து அழைத்துச் சென்றனர். இறந்த நபரான செல்வம் என்பவரது உடலானது உடற்கூறாய்விற்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப் பட்டது இறந்த நபருக்கு சித்ரா என்ற மனைவியும் தமிழ்ச்செல்வன்,அருள் என்ற இரு மகன்களும் உள்ளனர். இது சம்பந்தமாக மேல்பட்டி காவல் நிலையம் போலீசார் வழக்கு பதிவு செய்து
ரோஷன் பாபுவை கைது . விசாரணை மேற்கொண்டு . வருகிறார்கள்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக