கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் பெரும் செல்வவிளை சாலையில் வேம்பனூர் குளம் அருகே மினி டெம்போ மற்றும் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டது.
கடைகளுக்கு தண்ணீர் கேன்கள் மற்றும் சிறிய பானப் பொருட்கள் விநியோகம் செய்ய சென்ற மினி டெம்போ மீது எதிரே வந்த நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம் மோதியதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் மினி டெம்போ பகுதி முழுவதும் சேதம் அடைந்த நிலையில் ஓட்டுனருக்கு கை முறிவு உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து ஆசாரிப்பள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக