சாலை நடுவே உள்ள ராட்சச பள்ளம்..உயிர் பயத்தில் வாகன ஓட்டிகள்..நடவடிக்கை எடுக்க கோரிக்கை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 17 மார்ச், 2026

சாலை நடுவே உள்ள ராட்சச பள்ளம்..உயிர் பயத்தில் வாகன ஓட்டிகள்..நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

சாலை நடுவே உள்ள ராட்சச பள்ளம்..
உயிர் பயத்தில் வாகன ஓட்டிகள்..
நடவடிக்கை எடுக்க கோரிக்கை ...

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழியில் இருந்து ராஜாக்கமங்கலம் செல்லும் முக்கிய சாலையில் தர்மபுரம் அருகே சாலை நடுவே குடிநீர் குழாய் உடைந்து பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அந்த குழாயிலிருந்து தண்ணீர் தொடர்ந்து வெளியேறி சாலை முழுவதும் வெள்ளப்பெருக்கு போல வழிந்தோடி வருகிறது.

இந்த சாலை மிகவும் அகலமானதாக இருந்தாலும், தற்போது ஏற்பட்டுள்ள பெரிய பள்ளம் காரணமாக அந்த பகுதி முழுவதும் ஆபத்தான நிலையில் உள்ளது.

இந்த சாலை தொடர்ந்து வாகனங்கள் செல்லக்கூடிய பரபரப்பான சாலை. தற்காலிகமாக பேரிகார்ட் வைக்கப்பட்டுள்ளதால் மீதமுள்ள சிறிய இடைவெளியில் மட்டுமே வாகனங்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் பயணம் செய்ய வேண்டியுள்ளது. மேலும் அரசு பேருந்துகள், பள்ளி வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் வாகனங்கள் அந்த பகுதியை கடக்க மிகவும் திணறி வருகின்றன. இரவு நேரங்களில் இந்த நிலைமை காரணமாக தொடர்ச்சியாக விபத்துகள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. 

சாலை முழுவதும் தண்ணீர் ஓடுவதால் வாகன ஓட்டிகள் உயிர் பயத்துடன் அந்த வழியாக பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.உயிர் ஆபத்து ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக அந்த இடத்தை ஆய்வு செய்து உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்து சாலையில் ஏற்பட்டுள்ள பெரிய பள்ளத்தை விரைவாக சீரமைத்து, பொதுமக்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad