குடியாத்தம் சட்டமன்ற தொகுதிபேர்ணாம் பட்டில் வீட்டின் பின்புறம் கர்நாடக மது பாக்கெட்டுகள் விற்பனை ஒருவர் கைது! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 18 மார்ச், 2026

குடியாத்தம் சட்டமன்ற தொகுதிபேர்ணாம் பட்டில் வீட்டின் பின்புறம் கர்நாடக மது பாக்கெட்டுகள் விற்பனை ஒருவர் கைது!

குடியாத்தம் சட்டமன்ற தொகுதிபேர்ணாம் பட்டில் வீட்டின் பின்புறம் கர்நாடக மது பாக்கெட்டுகள் விற்பனை  ஒருவர் கைது!
பேரணாம்பட்டு ,மார்ச் 18 -
                வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பகுதியில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு  போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடு பட்டனர். அப்போது பேர்ணாம்பட்டைச் சேர்ந்த ஒரு நபர் தனது வீட்டின் பின்புறம் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வ தாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது இதனைத் தொடர்ந்து, போலீ ஸார் அந்த இடத்தில் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 25 மது பாக்கெட்டு களை (Karnataka Rum Pouches) விற் பனைக்காக பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.​இது தொடர்பாக சுரேஷ் (வயது 53) என்பவரைப் போலீ ஸார் கைது செய்தனர். அவரிடமிருந்த மது பாக்கெட்டுகளைப் பறிமுதல் செய்த மதுவிலக்கு போலீஸார், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad