ஆம்பூர் அருகே பேரனின் மனைவியிடம் தகராறில் ஈடுப்பட்ட மருமகளை கத்தி யால் வெட்டி கொலை செய்த மாமனார் !
தடுக்க சென்ற மகன் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி !
திருப்பத்தூர் ,மார்ச்.21-
திருப்பத்தூர் மாவட்டம். ஆம்பூர் அடுத்த பாலூர் கிராமத்தை சேர்ந்தவர் முனியன். இவருக்கு தேன்மொழி என்ற பெண்ணு டன் திருமணமாகி சில ஆண்டுகளுக்குப் பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவி விவாகரத்து பெற்று சென்ற நிலையில் இரண்டாவதாக ராஜேஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு அபிமன்யு என்ற மகன் பிறந்தார். இந்த நிலையில் ராஜேஸ்வரி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை குறைவால் இறந்து விட்ட நிலையில் முனியன் கவிதா என்ற பெண்ணை மூன்றாவது திருமணம் செய்துள்ளார் மேலும் முனியனின் இரண்டாவது மனைவி மகன் அபிமன்யு சென்னையில் பணியாற்றி வந்த நேரத்தில் தன்னுடன் பணியாற்றிய மாற்று சமூகத்தை சேர்ந்த பெண் பிரதீபா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு கடந்த சில மாதங்களுக்கு முன் பாலூர் பகுதியிற்கு வந்து நுங்கு வியா பாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் இந்த நிலையில் அபிமன்யு மாற்று சமூக பெண்ணை காதல் திருமணம் செய்துக் கொண்டது பிடிக்காமல் தந்தை முனியன் மற்றும் அவரது மூன்றாவது மனைவி யான கவிதா ஆகியோருக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் வழக்கம் போல் நேற்று முன்தினம் இரவு பிரதீபாவுக்கும் கவிதாக்கும் இடையே ஏற்பட்ட தகராறின் போது கவிதா பிரதீ பாவை தாக்கி, அவருடன் தகராறில் ஈடுப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
நடந்த சம்பவம் பிரதிபா தன்னுடைய கணவனுக்கு செல்போன் மூலம் தகவல் அளிக்க அபிமன்யு தனது தாத்தாவான சாமுண்டி என்பவருக்கு தகவல் தெரிவித் துள்ளார். தகவலின் பேரில் சம்பவம் நடந்த வீட்டிற்கு சென்ற சாமுண்டி சென்று கவிதாவிடம் வாக்குவாதத்தில் ஈடு பட்டுள்ளார். பின்னர் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த சாமுடி தான் வைத்திருந்த நுங்கு வெட்டும் கத்தியால் மருமகள் கவிதாவை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து ள்ளார். அப்போது தடுக்க சென்ற மகனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உமராபாத் போலீசார் கவிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக் கப்பட்டு படுகாயம் அடைந்த கணவன் முனியன் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளி சாமுண்டி என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். பேரனின் மனைவியிடம் தகராறு செய்த மருமகளை மாமனார் கத்தியால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப் பகுதியில் பெரும் அச்சுத்தையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக