ஆழ்வார்திருநகரி - ஆதிநாதர் ஆழ்வார் கோவில் கருடசேவை. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 2 மார்ச், 2026

ஆழ்வார்திருநகரி - ஆதிநாதர் ஆழ்வார் கோவில் கருடசேவை.

ஆழ்வார்திருநகரி - ஆதிநாதர் ஆழ்வார் கோவில் கருடசேவை. 

மார்ச் 2 தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள நவதிருப்பதிகளில் ஒன்பதாவதான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவில் மாசித் திருவிழா பிப்ரவரி 26 ந்தேதி கொடியேற்றம் நடந்தது.

இன்று 5 ந்திருவிழாவை முன்னிட்டு காலை 5 மணக்கு விஸ்வரூபம்.6.30 மணிக்கு திருமஞ்சனம். நித்தியல் 8 மணிக்கு தோளுக்கினியானில் வீதி புறப்பாடு நடந்தது. 10.30 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம். தீபாராதன. நாலாயிர திவ்வியப் பிரபந்தம் . சாத்துமுறை. தீர்த்தம் சடாரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

மாலை 5 மணிக்கு சாயரட்சை. உற்சவர் பொலிந்து நின்றபிரான் மற்றும் நம்மாழ்வார் வாகனகுறட்டிற்கு எழுந்தருளி. பொலிந்து நின்றபிரான் கருட வாகனத்திலும். நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் அலங்கரிக்கப்பட்டு 7.40 மணிக்கு குடவருவாயில் காட்சி தந்தார். 

பின்னர் ரதவீதி சுற்றி வந்தது . 6 ந்தேதி தேரோட்டம். 7, 8 தேதிகளில் தெப்பம். 9 ந்தேதி தீர்த்தவாரி நடைபெறுகின்றது. 

இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் கண்ணன். விவேக். சுவாதி. எம்பெருமானார் ஜீயர் நிர்வாக அதிகாரி சதீஷ். ஆய்வாளர் நம்பி. கள்ளப்பிரான் கோவில் ஸ்தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பலர் கலந்து கொண்டனர். 

காரிய மாறன் கலைக் காப்பகத்தினர் திருவிழா ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad