தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஏப்ரல் 25, 26ல் குழந்தைகள் கணித திருவிழா !
வேலூர் , ஏப்ரல் 5 -
வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட நிர்வாக குழு கூட்டம் இன்று மாவட்ட அலுவலகத் தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முத்து சிலுப்பன் தலைமை தாங்கினார். முன்னதாக மாவட்ட செய லாளர் முனைவர் செ. நா.ஜனார்த்தனன் வரவேற்று பேசினார். மாவட்ட துணைத் தலைவர் டி. சசிகலா இணைச் செயலா ளர்கள் பி.சுகுமாரன், வி.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்
மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் ப.ராஜேந்திரன், பி.ரவிந்திரன், பெ. ராமு, அணைக்கட்டு கிளை செயலாளர் இ.முரளி ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார்கள். குழந்தை கள் கணித திருவிழாவிற்கான செயல் அறிக்கையினை மாவட்ட செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் தலைவர் முத்து சிலுப்பன் அவர்களிடம் அளித்தார்.
பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
1.இம்மாதம் 25 மற்றும் 26 ஆகிய இரண்டு நாட்கள் குழந்தைகள் கணித திருவிழா கே.வி.குப்பம் வட்டம் லத்தேரி அடுத்த இயற்கை வேளாண் அரங்கம் அறிவுத் தோட்டம் வளாகத்தில் நடத்துவது என்றும் ஆறாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகள் பங்கேற்று பயன் பெறச் செய்யலாம் என தீர்மானிக் கப்பட்டது. கணித திருவிழாவில் இரண்டு நாட்களும் சிறப்பு கருத்தாளர் களைக் கொண்டு கணக்கும் இனிக்கும் கணிதத்தை எளிமையான முறையில் கற்கும் செயல்பாடுகள் குறித்து பயிற்சி கள் அளித்தல், எண்களுடன் விளயாடி மகிழ்வோம், செயல் வழி கற்றல் இயற் கையில் கணிதத்தின் வடிவங்களை ஆராய்தல், கணிதத்தை ஒரு சாகசமாக மாற்றுவது. 2. உலக புத்தக தின விழா வை கே.வி.குப்பம் ஒன்றியத்தில் இம் மாதம் கடைசி வாரத்தில் நடத்துவது
3. வேலூர் கிளையின் சார்பில் கோடை அறிவியல் முகாம் மே மாதம் இரண்டா வது வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள் ளது 4. மாவட்ட நிர்வாகத்துடன் மற்றும் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து அனைவரும் வாக்களிப்போம் வாக்களிப் பது நம் கடமை என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது 5. மக்கள் சாசனம் -2026 என்ற தலைப்பில் தமிழக வளர்க் கான ஒரு தொலை நோக்கோடு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் கோரிக்ககளை 17-வது சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிடும் வேண் டபாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களிடம் வேண்டுகோள் வைப்பது என தீர்மானிக்கப்பட்டது.
6. வேலூர் மாவட்டத்தில் உள்ள அறிவி யல் இயக்க கிளைகளுக்கு மாவட்ட நிர்வாகிகள் பொறுப்பேற்று செயல் படுவது என தீர்மானிக்கப்பட்டது.முடிவில் மாவட்ட பொருளாளர் ஆர்.காயத்ரி நன்றி கூறினார் .
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக