குடியாத்தத்தில் 20 கிலோ ஐஸ்கிரீம், 250 லிட்டர் குளிர்பானம் பறிமுதல் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 16 மே, 2026

குடியாத்தத்தில் 20 கிலோ ஐஸ்கிரீம், 250 லிட்டர் குளிர்பானம் பறிமுதல் !

குடியாத்தத்தில் 20 கிலோ ஐஸ்கிரீம், 250 லிட்டர் குளிர்பானம் பறிமுதல் !
குடியாத்தம் ,மே 16  -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கை யம்மன் கோவில் திருவிழாவில் தயாரி ப்பு, காலாவதி தேதி குறிப்பிடாத 20 கிலோ ஐஸ்கிரீம் மற்றும் 250 லிட்டர் குளிர்பானம் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில் வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்பு லெட்சுமி உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் பிரபாகரன் தலைமையில் அலுவலர்கள் ராஜேஷ், காயத்ரி, கஸ்தூரி, அஞ்சலி, ஹேமா ஆகியோர் அடங்கிய குழுவினர் குடியாத்தம் பஸ் நிலையம் முதல் கோவில் வளாகம் வரை உள்ள நிரந்தர மற்றும் தற்காலிக கடைகளில் திடீரென சோதனை மேற்கொண்டனர் . அப்போது சில கடைகளில் தடை செய்யப் பட்ட செயற்கை நிறமிகளை பயன்படுத்தி குளிர்பானங்கள் தயார் செய்து விற் பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. அந்த கடை களில் இருந்து 250 லிட்டர் குளிர்பானம் மற்றும் செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்டிருந்த ஐஸ்கட்டி கள் பறிமுதல் செய்யப்பட்டன.மேலும் சரக்கு ஆட்டோவில் தயாரிப்பு, காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 20 கிலோ ஐஸ்கிரீம் பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டன. ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad