ஏழை மாணவர்கள் ஏற்றம் அடைய ரோலிங் ஷூ வாங்கி கொடுத்த ஆட்சியர்!மாநில அளவில் வென்ற மாணவர்களு க்கு பாராட்டு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 12 மே, 2026

ஏழை மாணவர்கள் ஏற்றம் அடைய ரோலிங் ஷூ வாங்கி கொடுத்த ஆட்சியர்!மாநில அளவில் வென்ற மாணவர்களு க்கு பாராட்டு!

ஏழை மாணவர்கள் ஏற்றம் அடைய ரோலிங் ஷூ வாங்கி கொடுத்த ஆட்சியர்!மாநில அளவில் வென்ற மாணவர்களு க்கு பாராட்டு!
திருப்பத்தூர் ,மே12 -
திருப்பத்தூர் மாவட்டம், மேல் அச்சமங்க லம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழி லாளி செல்வகுமார் என்பவரின் பிள்ளை கள் பாச்சல் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் முகுந்தன் என்ற மாணவன் 8ம் வகுப்பும், கீர்த்திகா ஶ்ரீ என்ற மாணவி 7ம் வகுப்பும் படித்து வரும் நிலையில் இருவருக்கும் ஸ்கேட்டிங் விளையாட்டில் அதிக ஆர்வம் இருந்து உள்ளது. இதனால் கூலித்தொழிலாளி செல்வகுமார் ஆரம்பத்தில் குறைந்த விலையில் ரோலிங் சூ வாங்கி கொடுத்து உள்ளார். பின்னர் பிள்ளைகள் இருவரும் ஸ்கேட்டிங் விளையாட்டில் அதிக வேகம் காட்டி உள்ளனர். ஆரம்பத்தில் இருந்து ஸ்கேட்டிங் பழகி மாவட்ட மற்றும் மாநில அளவில் பல பதக்கங்களை வென்று உள்ளனர். இருப்பினும் அதிவேக ரோலிங் ஷூ இல்லாத காரணத்தினால் சற்று பின் தங்கி உள்ளனர். கூலி தொழி லாளி என்பதால் 60 ஆயிரம் மதிப்பிலான ரோலிங் ஷூ வாங்க முடியாமல் தவித்து ள்ளார். ரோலிங் ஷூ வேண்டுமென்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌ ந்தரவல்லி இடம் இதுகுறித்து தேர்தலு க்கு முன்னதாக மனு அளித்துள்ளனர். இதனை கருத்தில் கொண்டு புதிய ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் திங்கட்கிழமை யான இன்று வழக்கமாக திங்கட்கிழமை குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாணவர்களை அழை த்து அவர்களுக்கு 65 ஆயிரம் மதிப்பி லான ரோலிங் ஷூ மாவட்ட ஆட்சியரின் பொது நிதியிலிருந்து வழங்கினார். மேலும் ஏற்கனவே அவர்கள் மாநில அளவில் வெற்றி பெற்ற சான்றிதழை வணங்கி மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்று வாழ்த்தி அனுப்பினார். இதனால் பெருமிதம் அடைந்த அவரது பெற்றோர்கள் மேலும் எங்களது பிள்ளைகளுக்கு ஊக்கம் அளித்தால் இந்திய அளவில் சாதனை படைக்க எங்களது பிள்ளைகளை தயார் செய்வோம் என்று உறுதி கூறினார்.
 
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad