கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பிடிக்கும் மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் கலப்பை மக்கள் இயக்கம் பி.டி.செல்வகுமார் ஸ்கூட்டி வழங்கி பாராட்டுவது வழக்கம்.
மேலும், அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களையும் பாராட்டி பரிசு வழங்கப்படுகிறது.
இந்நிலையில் மாவட்டத்தில் முதலிடம் பிடித்த கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியும், கட்டிட கூலித் தொழிலாளி மகள் Y.S.அக்சயா, இரண்டாம் இடம் பிடித்த பஞ்சலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த படகுத்துறையில் பணிபுரியும் தொழிலாளி P.நீலகண்டன், S.சங்கீதா தம்பதியரின் மகன் நாவல்காடு அரசு மாதிரிப் பள்ளி மாணவர் P.ஹரி, ஆகியோருக்கு கலப்பை மக்கள் இயக்கம் தலைவர் பி.டி.செல்வகுமார் ஸ்கூட்டி பரிசு வழங்கனார்.
தமிழக குரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக