திருப்பத்தூர் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு !
திருப்பத்தூர் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் பாராட்டு தெரிவிக் கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
இதில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் சிறப்பான மதிப்பெண் கள் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் க.சிவசெளந்தரவள்ளி பரிசுத்தொகை வழங்கி பாராட்டினார்.
மேலும் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகளுக்கிடையேயான கல்வித் தரவரிசையில், வெங்களாபுரம் வேளாங் கண்ணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜோதிகா மற்றும் வாணியம் பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ரூபி ஆகியோர் தலா 595 மதிப் பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ள னர். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் திருப்பத்தூர் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி மாணவி யஷ்வந்தினி 584 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத் துள்ளார். கசிநாயக்கன்பட்டி அரசு மேல் நிலைப் பள்ளி மாணவி நதியா 580 மதிப் பெண்களும், வாணியம்பாடிஇஸ்லாமியா அரசு நிதியுதவி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி நைவாசல் சுஹா 575 மதிப்பெண்களும் பெற்று பள்ளிக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ள னர். கடந்த 08.05.2026 அன்று வெளியிடப் பட்ட 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு களின்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் 13,447 மாணவர்கள் தேர்வு எழுதியிருந்த னர். இதில் 12,597 பேர் தேர்ச்சி பெற்று, மாவட்டம் 93.68 சதவீத தேர்ச்சி விகிதத் தை பதிவு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலர் இரா.புண் ணியகோட்டி, மாவட்டக் கல்வி அலுவலர் கள் மற்றும் தொடர்புடைய பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக