5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 30 வருடம் சிறை தண்டனை மற்றும் 13,000 ரூபாய் அபராதம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 12 மே, 2026

5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 30 வருடம் சிறை தண்டனை மற்றும் 13,000 ரூபாய் அபராதம்.

5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு 30 வருடம் சிறை தண்டனை மற்றும் 13,000 ரூபாய் அபராதம்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விரைவில் விசாரணை முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதையும் அவ்வழக்குகளில் நீதிமன்ற விசாரணையை கண்காணித்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அளித்தல் ஆகிய செயல்பாடுகள் மூலம் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தருவதை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு மருதங்கோடு, மடத்துவிளை வீடு பகுதியை சார்ந்த தங்கராஜ் என்பவரின் மகன் ரெஜி(46) என்ற குற்றவாளி 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குற்ற எண் 16/2020 U/S 449ipc &5(i),5(M),6 POCSO Act. இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்து குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை நாகர்கோவில் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது இந்நிலையில் நீதிபதி இக்குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிக்கு 30 வருடம் சிறை தண்டனை மற்றும் 13,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார்கள்.
நீதிமன்ற வழக்கு விசாரணை மற்றும் சாட்சிகள் விசாரணை ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தர காரணமாக இருந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர், நீதிமன்ற காவலர் இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை முறையாக கண்காணித்த மார்த்தாண்டம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad