போக்குவரத்து காவலர்களுக்கு குளிரூட்டும் கண்ணாடிகள் மற்றும் கையுறை வழங்கிய குமரி எஸ்பி ஸ்டாலின். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 4 ஜூன், 2026

போக்குவரத்து காவலர்களுக்கு குளிரூட்டும் கண்ணாடிகள் மற்றும் கையுறை வழங்கிய குமரி எஸ்பி ஸ்டாலின்.

போக்குவரத்து காவலர்களுக்கு குளிரூட்டும் கண்ணாடிகள் மற்றும் கையுறை வழங்கிய குமரி எஸ்பி ஸ்டாலின்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக வெயில், மழை பாராமல் சாலைகளில் பணியாற்றும் போக்குவரத்து காவலர்களின் நலனை கருத்தில் கொண்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஸ்டாலின் முன்னெடுப்பில் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் கேப் ஸ்டார்ட் நிறுவனத்தின் பங்களிப்புடன் அனைத்து போக்குவரத்து காவலர்களுக்கும் குளிரூட்டும் கண்ணாடிகள் மற்றும் கையுறைகள் வழங்கப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, காவலர்களின் உடல்நலன் மற்றும் பணித்திறனை மேம்படுத்தும் மனிதநேய முயற்சியாக அமைந்தது. காவலர்களின் நலனில் தொடர்ந்து அக்கறை செலுத்தி வரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்த நடவடிக்கைக்கு காவல்துறை வட்டாரங்களும் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையகம் கலையரசன், 

நாகர்கோவில் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் இளஞ்செழியன், ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர்.கோவிந்தராஜு மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad