6 பதக்கங்கள் வென்ற பெண் காவலர்கள் நேரில் அழைத்து எஸ்பி ஸ்டாலின் பாராட்டு. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 4 ஜூன், 2026

6 பதக்கங்கள் வென்ற பெண் காவலர்கள் நேரில் அழைத்து எஸ்பி ஸ்டாலின் பாராட்டு.

6 பதக்கங்கள் வென்ற பெண் காவலர்கள் நேரில் அழைத்து எஸ்பி ஸ்டாலின் பாராட்டு 

மூன்றாவது தேசிய மகளிர் மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு 4 தங்கம், 2 வெள்ளி பதக்கங்கள் வென்ற பெண் உதவி ஆய்வாளர், பெண் தலைமைக் காவலர் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஸ்டாலின் அழைத்து பாராட்டினார்.
3வது தேசிய மகளிர் மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் - 2026 போட்டி கடந்த இரண்டு நாட்களாக கோவாவில் நடந்தது. இதில் (30முதல் 35 வயது பிரிவு) போட்டிகளில் கன்னியாகுமரி மாவட்டம் நேசமணி நகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் உதவி ஆய்வாளர் கீதா 4x400 மீட்டர் தொடர் ஓட்ட பந்தயத்தில் தங்கப்பதக்கம், 800 மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் Hammer Throw போட்டிகளில் வெள்ளிப் பதக்கங்கள் என 3 பதக்கங்கள் பெற்றார். 
(40 முதல் 45 வயது பிரிவு) போட்டிகளில் மணவாளகுறிச்சி காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் தலைமை காவலர் கிருஷ்ண ரேகா உயரம் தாண்டுதல் (High Jump), மும்முறை தாண்டுதல் (Triple Jump) மற்றும் 80 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு 3 தங்கப் பதக்கங்களை பெற்றார். உதவி ஆய்வாளர் திருமதி. தடகள போட்டிகளில் பதக்கங்களை வென்ற கீதா மற்றும் தலைமை காவலர் கிருஷ்ணரேகா ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர். ஸ்டாலின் மாவட்ட காவல் அலுவலகத்தில் வரவழைத்து நேரில் பாராட்டி வாழ்த்தினார்

தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad