கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் நிறுவனர் கு.மா.கோவிந்தராசனாரின் 107வது பிறந்தநாள் விழாவைமுன்னிட்டு - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

திங்கள், 27 ஜூலை, 2026

கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் நிறுவனர் கு.மா.கோவிந்தராசனாரின் 107வது பிறந்தநாள் விழாவைமுன்னிட்டு

கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் நிறுவனர்  கு.மா.கோவிந்தராசனாரின் 107வது பிறந்தநாள் விழாவைமுன்னிட்டு 
குடியாத்தம் திருவள்ளுவர் மேனிலைப் பள்ளியில் திருவுருவப் படத்திற்கும் மற்றும் திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
குடியாத்தம் - ஜூலை 26 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கே எம் ஜி கல்வி நிறுவனத்தின் நிறுவனர் 107வது பிறந்த நாளை முன்னிட்டு குடியாத்தம் திருவள்ளூர் மேல்நிலைப் பள்ளியில் திருவுருவு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை நடைபெற்று முடிந்த அரசுப் பொதுத் தேர்வில் பத்தாம் வகுப்பில் 498/500 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாமிடம்; பெற்ற மாணவி செல்வி. எஸ்.காவ்யாவிற்கு காசோலை ரூ.25,000/- மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் மாவட்ட அளவில் 596/600 முதலிடம் பெற்ற மாணவி செல்வி. எஸ். ஜெயசுதாவிற்கு காசோலை ரூ.10,000/- கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் சார்பாக வழங்கப்பட்டது. மேலும் மாணவி களின் பெற்றோர்களுக்கு மரியாதை செய்து, அம்மாணவிகளுக்கு பயிற்று வித்த தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு சிறப்பு செய்து வாழ்த்தினர்.  இவ்விழாவிற்கு கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் நிர்வாகப் பெருமக்கள், திருவள்ளுவர் தொடக்கப் பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமையா சிரியர்கள், கல்லூரி முதல்வர்கள், இயக் குநர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad