ரேசன் கடையில் குடும்ப உறுப்பினர்களின் கைரேகை (பயோமெட்ரிக்), கண் கருவிழி பதிவு செய்யும் முகாம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 31 ஜூலை, 2026

ரேசன் கடையில் குடும்ப உறுப்பினர்களின் கைரேகை (பயோமெட்ரிக்), கண் கருவிழி பதிவு செய்யும் முகாம்.

அரசின் சலுகைகளை தொடர்ந்து பெற, ரேசன் கடையில் குடும்ப உறுப்பினர்களின் கைரேகை (பயோமெட்ரிக்), கண் கருவிழி பதிவு செய்யும் முகாம்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெற்று வரும் குடும்ப அட்டைதாரர்களில் நாளது தேதி வரை நியாய விலைக்கடைகளில் கைரேகை/கண் கருவிழி பதிவுசெய்திடாத, 

குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் தங்களது கைரேகைகளை நியாயவிலைக்கடைகளில் பதிவு செய்திட சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே வெளியூரில் / வெளி மாவட்டத்தில் தங்கி பணிபுரிந்துவரும் நபர்கள் மற்றும் பள்ளிக் கல்லூரிகளில் படித்துவரும் மாணவ, மாணவிகள் தாங்கள் இருக்கும் ஊரில் / மாவட்டத்திலுள்ள நியாயவிலைக் கடைகளுக்கு நேரில் சென்று தங்கள் ரேகையை பதிவு செய்து கொள்ளலாம்.

இது தொடர்பான முகாமானது 02.08.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை அனைத்து நியாய விலைக் கடைகளிலும் நடைபெற உள்ளது.

பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது கைரேகை மற்றும் கண்கருவிழி விபரங்களை நியாய விலைக் கடைகளுக்கு நேரில் சென்று பதிவு செய்து, பொது விநியோகத்திட்டத்தில், அரசின் சலுகைகளை தொடர்ந்து பெற தங்களது முழு ஒத்துழைப்பினை நல்கும்படி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad