நாசரேத் சாலமோன் பள்ளியில் பழங்கள் மற்றும் காய்கறிகள் தினம். - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 1 ஆகஸ்ட், 2026

நாசரேத் சாலமோன் பள்ளியில் பழங்கள் மற்றும் காய்கறிகள் தினம்.

நாசரேத் சாலமோன் பள்ளியில் பழங்கள் மற்றும் காய்கறிகள் தினம்

ஆகஸ்ட்: 1, நாசரேத் சாலமோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மழலையர்கள் நடத்தும் பழங்கள் மற்றும் காய்கறிகள் தினம் கொண்டாடப்பட்டது. 

இந்த விழாவில் பள்ளி தாளாளர் ஜமீன் சாலமோன் சிறப்பு விருந்தினராக கலந்து கொணடு, பழங்கள் மற்றம் காய்கறிகளின் நன்மைகளைப்பற்றி மாணவர்களுக்கு எடுத்துக்கூறினார். 

பள்ளி தலைவர் எலிசபெத் முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் ஜான்சி கனகராஜ் சிறப்புரையாற்றினார்.

பள்ளி குழந்தைகள் இந்த நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினர். குழந்தைகள் பழங்கள் மற்றும் காய்கறிகள் பற்றி பேச்சுப் போட்டி, பட்டிமன்றம் மற்றும் நடனப் போட்டி நடத்திக்காட்டினர். 

குழந்தைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளின் வேடம் அணிந்து வந்திருந்தனர். விழா முடிவில் பள்;ளி உதவி முதல்வர் முத்துபேச்சி நன்றி உரை கூறினார். 

இந்த விழா ஏற்பாட்டினை பள்ளி ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர். மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி விழா இனிதே நிறைவடைந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad