அருமனை அருகே 28 வயது இளம் பெண்ணிடம் திருமணம் செய்வதாக நம்பிக்கை அளித்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் ரூ.5 லட்சம் பணம் மற்றும் 6 கிராம் தங்க நகையை பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக அருண் (30) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், நெருக்கமாக இருந்தபோது எடுத்த வீடியோக்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி மீண்டும் விடுதிக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட இளம்பெண் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அருணை தீவிரமாக தேடி வருகின்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக