ஓய்வூ பெற்ற அரசு அலுவலர்கள் சங்க ஆண்டு விழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 31 ஜூலை, 2026

ஓய்வூ பெற்ற அரசு அலுவலர்கள் சங்க ஆண்டு விழா.

ஓய்வூ பெற்ற அரசு அலுவலர்கள் சங்க ஆண்டு விழா ‌ 

ஸ்ரீவைகுண்டம் ஆகஸ்ட் 1 தமிழ் நாடு ஓய்வூ பெற்ற அரசு அலுவலர் சங்கம் ஸ்ரீவைகுண்டம் கிளையின் 34 வது ஆண்டு விழா யாதவர் திருமண மண்டபத்தில் நடந்தது. 

தமிழ் நாடு அரசு ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கிளைத் தலைவர் வெங்கடாச்சாரி தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். தமிழ் தாய் வாழ்த்துடன் துவங்கியது.

சங்கையா வரவேற்புரை வாசித்தார். செயலாளர் மாடசாமி சொர்ணம் ஆண்டு அறிக்கை படித்தார். பொருளாளர் சென்ற ஆண்டு மற்றும் சென்ற ஆண்டு விழா வரவு செலவு கணக்குகளை வாசித்தார். 

நாசரேத் கிளை தலைவர் ரத்னகுமார். கோவில்பட்டி கிளை தலைவர் ராஜாமணி திருச்செந்தூர் கிளை தலைவர் கண்ணன். மணி மொழி ரங்கசாமி. விஸ்வநாதன். கருவூல கணக்கர் கருவேலமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

மாநில துணைத் தலைவர் தங்கவேல் மருத்துவ காப்பீடு பற்றியும் ஓய்வூதி பலன் பற்றியும் விளக்க உரை ஆற்றினார். தலைவர் வெங்கடாச்சாரி கோரிக்கை தீர்மானங்களை வாசித்து கரவொலியுடன் நிறைவேற்றினார். 

சிறப்பு அழைப்பாளர் பத்நாபமங்கலம் கணபதி பாராட்டு சங்கத்தின் சார்பில் பாராட்டு தெரிவித்தனர். இந்த ஆண்டு 75,80,85,90 ஆண்டு நிறைவு பெற்றவர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

நிர்வாக குழு உறுப்பினர்கள் தாமஸ், வெங்கட்ராமன் துணைத் தலைவர் மகாலிங்கம். பரமசிவன் தணிக்கையாளர் ராமசாமி ஆகியோர் சேவையை பாராட்டின பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர். 

தணிக்கையாளர் சுந்தர பாண்டியன் நன்றி நின்றார். தேசீய கீதத்துடன் விழா நிறைவு பெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad