குடியாத்தம் அருகே இருசக்கர வாகனத் தில் சென்றவர் நிலை தடுமாறி தவறி விழுந்து உயிரிழப்பு !
குடியாத்தம், ஜூலை 20 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் போஜனாபுரம் மதுரா பக்கிரிபல்லி கிராமத்தில் வசித்து வந்த சாதுல்லா (வயது 27) த/பெ ஜான் பாஷா அவர்கள் நேற்று 1.00 மணியளவில் சீவூராண்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் செல்லும் போது நிலை தடுமாறி கீழே விழுந்து உள்ளார் இவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனை க்கு அனுப்பி வைத்துள்ளார்கள் பின்பு மேல் சிகிச்சைக்காக வேலூர். அடுக்கம் பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளார்கள் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று(20.07.2026) காலை 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார் என விசார ணையில் தெர மேற்படி இறந்த நபருக்கு ஆஜிரா (24)என்ற மனைவியும் இரண்டு வயது பெண் குழந்தை உள்ளது மேற்படி நபர் கூலி வேலை செய்து வந்தார்.
இது சம்பந்தமாக நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக