வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இயக்க மறு சீரமைப்பு திட்ட துவக்க நிகழ்ச்சி ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 27 ஆகஸ்ட், 2026

வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இயக்க மறு சீரமைப்பு திட்ட துவக்க நிகழ்ச்சி !

வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இயக்க மறுசீரமைப்பு திட்டதுவக்க நிகழ்ச்சி !
குடியாத்தம் , ஆகஸ்ட் 27 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காங்கிரஸ் கட்சியை அடிமட்டத்திலிருந்து பலப்படுத் தும் வகையில் வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இயக்க மறு சீரமைப்பு (SSA -2) திட்டதுவக்க நிகழ்ச்சி நேற்று (26.08.2026) புதன்கிழமை மாலை 5 மணியளவில் குடியாத்தம் கவின் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.சுரேஷ் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர்கள் நீலகண்டன், கிருஷ்ணவேணி ஜலந்தர், தேவகிராணி ராஜேந்திரன், துரை.முருகேசன், இர்ஷாத் அஹ்மத் ஆகியோர் முன்னிலை வகித்த
னர் குடியாத்தம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் டாக்டர். நவீன் பிரபு வரவேற் புரை ஆற்றினார். நிகழ்வில் வேலூர் மண்டல பொறுப்பாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளரு மான ஏ.அருள் பெத்தையா அவர்களும், வேலூர் மத்திய மாவட்ட பார்வையாளர் நாமக்கல் திரு. பி.ஏ.சித்திக் அவர்களும் கலந்துக் கொண்டு இயக்க மறுசீரமைப்பு திட்டம் குறித்து விளக்கவுரை ஆற்றினர்
 நிகழ்வில் பதவி கோரும் நிர்வாகிகளு க்கு  விண்ணப்ப படிவங்கள் விநியோகிக் கப்பட்டன. தொடர்ந்து பத்திரிக்கையாளர் கள் சந்திப்பு நடைபெற்றது. நிகழ்வில் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள்  சங்கர், வீராங்கன், செல்வக்குமார், ஜோதி கணேசன், ஜெகந்நாத ரெட்டி, நித்தியா னந்தம், சேகர், தாண்டவமூர்த்தி, தன சேகரன், ஆரோன், வேலூர் மாநகர மண் டல தலைவர் அரியூர் சோமு, பேரணாம் பட்டு நகர தலைவர் ராகிப், மற்றும் மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர் திருமதி. கோமதி குமரேசன், மாவட்ட எஸ்ஸி பிரிவு தலைவர் அன்பரசன், மாவட்ட ஓபிசி பிரிவு தலைவர் ராகேஷ், மாவட்ட மனித உரிமைகள் துறை தலைவர் யுவராஜ், மாவட்ட RGPRS பிரிவு தலைவர் ஆனந்தவேல், மாவட்ட சிறுபான் மையினர் பிரிவு தலைவர் நவாலி தாஹீர், மாவட்ட நெசவாளர் பிரிவு தலைவர் ஜெயவேலு, மாவட்ட ஊடக பிரிவு தலைவர் ஆம்புலன்ஸ் ராஜேஷ், மாவட்ட நிர்வாகிகள் காமராஜ், சேகரன், விஜயேந்திரன், ராஜசேகரன், வாசு, பாஸ்கரன், அன்பரசி, உஷாராணி, செந்தில், சரத்சந்தர், விஜயகுமார், மாசிலாமணி, ராணி, சத்தியமூர்த்தி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாணவர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் தியாக ராஜன், முன்னாள் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் கண்ணன், மாநில எஸ்ஸிபிரிவு பொதுச் செயலாளர்கள் சுப்பிரமணி,  சுரேஷ், மாநில ஓபிசி துணைத் தலைவர் ஜலேந்திரன், பொதுச் செயலாளர் சுனில், லோகநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் குடியாத் தம் கிழக்கு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் லாலா லஜபதி நன்றியுரை கூறினார்.

 குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad