நகராட்சிக்குட்பட்ட நகர்ப்புற சுகாதார மையத்தை நகராட்சி ஆணையாளர் மேகலா நேரில் சென்று ஆய்வு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 3 செப்டம்பர், 2026

நகராட்சிக்குட்பட்ட நகர்ப்புற சுகாதார மையத்தை நகராட்சி ஆணையாளர் மேகலா நேரில் சென்று ஆய்வு !

நகராட்சிக்குட்பட்ட நகர்ப்புற சுகாதார மையத்தை நகராட்சி ஆணையாளர் மேகலா நேரில் சென்று ஆய்வு !
ராணிப்பேட்டை , செப்டம்பர் 3 -
           ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டை நகராட்சிக்குட்பட்ட நகர்ப்புற 
சுகாதார மையத்தை நகராட்சி ஆணை யாளர் மேகலா நேரில் சென்று ஆய்வு 
மேற் கொண்டார்.ஆய்வின் போது சுகா தார மையத்தில் பொதுமக்களுக்கு வழங் கப்பட்டு வரும் மருத்துவ சேவைகள், நோ யாளிகளுக்கான அடிப்படை வசதிகள், 
மருத்துவ உபகரணங்களின் பயன்பாடு, சுகாதாரப் பராமரிப்பு மற்றும் மருத்துவப் 
பணிகளின் செயல்பாடுகள் குறித்து அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய் தார்.மேலும், சுகாதார மையத்தின் சிறப் பம்சங்கள் மற்றும் பொதுமக்களுக்கு 
பயனளிக்கும் மருத்துவ சேவைகள் குறி த்து கேட்டறிந்த ஆணையாளர், அங்கு 
காணப்பட்ட குறைபாடுகள் மற்றும் தேவையான அடிப்படை வசதிகள் குறித் தும் ஆய்வு செய்தார் பொதுமக்களுக்கு 
தரமான மருத்துவ சேவைகள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்யவும், சுகாதார 
மையத்தில் தேவையான வசதிகளை மேம் படுத்தவும் உரிய நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
ஆய்வின்போது சுகாதார மைய மருத்து வர்கள் ராம் மோகன், செவிலியர்கள்
நகராட்சி சுகாதார ஆய்வாளர்  தட்ணா மூர்த்தி மற்றும் நகராட்சி அலுவலர்கள்
உடனிருந்தனர்.

  மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad