கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 75 மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளாக தூய்மை பணிகளை புறக்கணித்து தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூய்மை பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக வழங்கப்படவில்லை என்றும், மாத ஊதியம் ஒவ்வொரு மாதமும் 5-ஆம் தேதிக்குள் வழங்கப்படுவதில்லை என்றும், ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்தது முதல் இதுவரை ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை நிரந்தரமாக பணி அமர்த்த வேண்டும் என்றும் பணியாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
தூய்மை பணியாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக உளுந்தூர்பேட்டை நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி கிடப்பதாகவும், வீடுகளில் தேங்கியுள்ள குப்பைகளை பொதுமக்கள் சாலையோரங்களில் கொட்டி வருவதால் சாலைகளில் ஆங்காங்கே குப்பைகள் துர்நாற்றம் வீசுவதால் குப்பைகள் குவிந்து கிடப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. குப்பைகளை கால்நடைகள் மற்றும் தெருநாய்கள் கிளறுவதால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு மற்றும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கோரிக்கைகள் வைத்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக